சின்னசேலம் அருகேசூப்பர்மார்க்கெட்டில் நூதன முறையில் பணம் பறிப்புபோலீஸ் விசாரணை
சின்னசேலம் அருகே சூப்பர்மார்க்கெட்டில் நூதன முறையில் பணத்தை ஒருவர் பறித்து சென்றாா்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது 31). இவர் நயினார்பாளையம் கிராமத்தில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். அங்கு வந்த ஒருவர் மளிகை பொருட்களை வாங்கினார். அந்த பொருட்களை எடுத்து செல்லாமல், ரூ.1400 விலையில் ஒரு அரிசி மூட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு, தனக்கு ரூ. 2 ஆயிரம் தாருங்கள் வீட்டில் அரிசி மூட்டையை வைத்துவிட்டு, மளிகை பொருட்களை வாங்க வரும்போது மொத்தமாக அனைத்து பணத்தையும் தந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய மங்கையர்கரசி ரூ.2 ஆயிரம் பணத்துடன், அரிசி மூட்டையை அந்த நபரிடம் கொடுத்தார். அதை எடுத்து சென்றவர் திரும்பி வரவே இ்ல்லை. இதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டது மங்கையர்கரசிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கீழ்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை தேடிவருகின்றனர்.