சேலத்தில்வேலைவாய்ப்பு தருவதாக கூறி ரூ.9.73 லட்சம் மோசடி3 பெண்கள் மீது புகார்


சேலத்தில்வேலைவாய்ப்பு தருவதாக கூறி ரூ.9.73 லட்சம் மோசடி3 பெண்கள் மீது புகார்
x
சேலம்

சேலம்

காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர், சேலம் அம்மாபேட்டையில் குழந்தைகளுக்கான அறக்கட்டளை வைத்து நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த கலைவாணி, ஜோதி, மாது ஆகியோர் வந்தனர். பின்னர் அவர்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்பு தர போவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கு உதவி செய்யுமாறு கேட்டு கொண்டனர். இதை உண்மை என்று நம்பிய சக்திவேல், அதே பகுதியை சேர்ந்த 91 பெண்களிடம் ரூ.9 லட்சத்து 73 ஆயிரத்து 800-ஐ வசூல் செய்து அவர்களிடம் வழங்கினார். ஆனால் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு 3 பெண்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் மற்றும் பணம் கொடுத்த பெண்கள் இந்த மோசடி குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பணம் மோசடி செய்த பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story