நகை- பணம், மடிக்கணினி திருட்டு


நகை- பணம், மடிக்கணினி திருட்டு
x

செருவாவிடுதியில் செவிலியர் வீட்டின் மேற்கூரையை உடைத்து நகை, பணம், மடிக்கணினியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் ஏப்.8-

செருவாவிடுதியில் செவிலியர் வீட்டின் மேற்கூரையை உடைத்து நகை, பணம், மடிக்கணினியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

செவிலியர்

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதியில் இயங்கி வரும் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருபவர் ஜெயசித்ரா(வயது36). இவரது கணவர் ஹரிஹரன். இவர் செருவாவிடுதியை சேர்ந்த ஒரு ஒப்பந்தக்காரரிடம் கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார். திருச்சிற்றம்பலம்- செருவாவிடுதி சாலையில் உள்ள ஒப்பந்தக்காரருக்கு சொந்தமான வீட்டில் ஹரிஹரன் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

நகை, பணம் திருட்டு

சம்பவத்தன்று இரவு ஹரிஹரன் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஜெயசித்ரா தனது பாதுகாப்புக்காக தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தோழி வீட்டுக்கு சென்றுவிட்டார்.இதை கவனித்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க பகுதியின் வழியாக மேல ஏறி அங்கு பொருத்தப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளை உடைத்து, வீட்டில் உள்ளே புகுந்து, அங்கிருந்த நகை, பணம், மடிக்கணினி, ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனா். இதன் மதிப்பு ரூ.61 ஆயிரம் ஆகும்.

கைரேகை நிபுணர்கள்

இது குறித்து ஜெயசித்ரா, திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும் தஞ்சையில் இருந்து தடய அறிவியல் துறை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story