கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவதற்கு எதிர்ப்பு


கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவதற்கு எதிர்ப்பு
x

சிவகிரி அருகே கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணம் பஞ்சாயத்து தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற இருந்தது. கோவில் செயல் அலுவலர் கேசவராஜன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், கோவிலுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்த பின்னரே உண்டியிலில் இருந்து காணிக்கை பணத்தை எண்ணி எடுத்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறவில்லை.

1 More update

Next Story