விருத்தாசலம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் பணம் திருட்டு


விருத்தாசலம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் பணம் திருட்டு
x

விருத்தாசலம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் பணம் திருடிய மா்மநபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் கல்லூரி நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது 65). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த வாரம் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் மதுரை சென்றிருந்தார். இந்த நிலையில் விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியில் உள்ள அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி, தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தொியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story