ஓசூரில்லாரி டிரைவரிடம் செல்போன், பணம் திருட்டு


ஓசூரில்லாரி டிரைவரிடம் செல்போன், பணம் திருட்டு
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

தென்காசியை சேர்ந்தவர் அபுபக்கர் (வயது 34). லாரி டிரைவர். இவர் சென்னையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார். ஓசூர் தொரப்பள்ளி பக்கமாக சென்ற போது லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு சட்டையை கழற்றி வைத்து விட்டு டிரைவர் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது 2 வாலிபர்கள் வந்து அபுபக்கர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை திருடினார்கள். சத்தம் கேட்டு எழுந்த அபுபக்கர் அவர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அபுபக்கர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story