சேலம் செவ்வாய்பேட்டையில்மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு


சேலம் செவ்வாய்பேட்டையில்மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
x
சேலம்

சேலம்

சேலம் அமானிகொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இரும்பு வியாபாரி. இவர் செவ்வாய்பேட்டை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளின் சீட் கவரில் ரூ.2 லட்சத்தை வைத்து விட்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது ரூ.2 லட்சம் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story