தேன்கனிக்கோட்டையில்எல்.ஐ.சி. முகவர் வீட்டில் தங்க நகை, பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை டீச்சர்ஸ் காலனியை கணேசன் (வயது55). எல்.ஐ.சி. முகவர். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தனது சகோதரர் இறந்த இறுதி சடங்கில் பங்கேற்க மரக்கட்டா கிராமத்திற்கு சென்றார். சடங்கு முடிந்த பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீேராவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்ற தெரியவந்தது. இதுகுறித்து கணேசன் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.