ஆத்தூர் அருகே வெங்காய வியாபாரி வீட்டில் ரூ.2¼ லட்சம் திருட்டு


ஆத்தூர் அருகே வெங்காய வியாபாரி வீட்டில் ரூ.2¼ லட்சம் திருட்டு
x

ஆத்தூர் அருகே வெங்காய வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை திருடி சென்றனர்.

சேலம்

ஆத்தூர்

ஆத்தூர் அருகே வெங்காய வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை திருடி சென்றனர்.

வெங்காய வியாபாரி

ஆத்தூர் உடையார்பாளையம் நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் மாது (வயது 55). வெங்காய வியாபாரி. இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாது ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாரசந்தைகளுக்கு சென்று வெங்காயம் மொத்தமாக வாங்கி சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை இவர் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மேஜையில் பணத்தை வைத்துவிட்டு தூங்க சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் பல்வேறு இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை. மேலும் பக்கத்தில் ஒரு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.60 ஆயிரமும் திருட்டு போனது. வீடு திறந்து இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து மாது ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story