வெங்காய கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு


வெங்காய கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு
x

தர்மபுரியில் வெங்காய கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு போனது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி புரோக்கர் ஆபீஸ் பகுதியில் வெங்காய கடை நடத்தி வருபவர் சந்திரபாபு (வயது 40). இவர் கடையை பார்த்து கொள்ளுமாறு அங்கு பணிபுரியும் ஊழியரிடம் கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் அந்த கடைக்கு வெங்காயம் வாங்குவது போல் சென்ற மர்ம நபர், கடையில் இருந்த ஊழியரின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த ரூ.80 ஆயிரத்தை திருடி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் இதுகுறித்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சந்திரபாபு தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story