ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பணம் திருட்டு
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சுகுமார். இவர் அங்குள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் எடுத்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் அவர் பணத்தை தனது ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் வைத்தார்.
இதையடுத்து அவர் அங்கிருந்து சிறிது தூரம் நடந்்து சென்று விட்டு மீண்டும் வந்தார். அப்போது ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து ஆனேக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் வலைவீச்சு
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் காரில் வந்த 4 பேர் ஸ்கூட்டரில் இருந்த பணத்தை திருடிச் சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதிவை வைத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.