பணம் திருடியவர் கைது


பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

கடலூர்

பரங்கிப்பேட்டை

கிள்ளையில் மூழக்குத்துரை செல்லும் வழியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு அருகே, பிரசித்தி பெற்ற சிந்தாமணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 11-ந்தேதி இரவு, கோவில் முன்பு இருந்த உண்டியலை மர்ம நபர் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டார்.இதுகுறித்து கோவில் பூசாரி மாதவன் கிள்ளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். பரணிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், எம்.ஜி.ஆர்.திட்டு பகுதியை சேர்ந்த சிவா என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, சிவாவை போலீசார் கைது செய்தனர்.


Next Story