ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு


ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 7 April 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) வருகை தர உள்ளார். இந்தநிலையில் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் பாதுகாப்பு கூடுதலாக பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்திகடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிவேக போர்க்கப்பல் ஒன்றும், சென்னை மற்றும் தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு சொந்தமான 3 அதிவேக கப்பல்களும் இரவு, பகலாக தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 கப்பல்களிலும் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாம்பன் குந்துகால் பகுதியில் உள்ள கடற்படை முகாமில் இருந்தும் கடற்படை வீரர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியை சுற்றியுள்ள தீவு பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து கடற்படை கமாண்டோ வீரர்கள் ஹெலிகாப்டர்களிலும் தீவிர ரோந்து ெசன்று கண்காணித்து வருகின்றனர்.


Next Story