வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளும், தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சி துறை சிறப்பு செயலாளருமான ஹர்சகாய் மீனா நேற்று உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் வாகனங்கள் பதிவு செய்யும் முறை, இணைய வழியில் அபராதம் வசூலிக்கும் முறைகள் மற்றும் பர்மிட் வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், எந்த தவறும் நடக்காத வகையில் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து வெள்ளையூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் உளுந்தூர்பேட்டையில் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம், பணியை நல்ல தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ஷ்ரவன்குமார், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், நகராட்சி ஆணையர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.