தெரு நாய்கள் கடித்து குதறியதில் குரங்கு சாவு


தெரு நாய்கள் கடித்து குதறியதில் குரங்கு சாவு
x

கிருஷ்ணகிரியில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் குரங்கு இறந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சேலம் சாலையில் உள்ள முல்லை நகரில் பெண் குரங்கு ஒன்றை தெரு நாய்கள் துரத்தின. கர்ப்பமாக இருந்ததால் அந்த குரங்கால் வேகமாக ஓட முயவில்லை. இதையடுத்து தெரு நாய்கள் அந்த குரங்கின் கழுத்தில் கடித்தன. மேலும் காப்பற்ற முயன்ற மற்ற குரங்குகளையும் தெரு நாய்கள் துரத்தின. இதில் சிறிது நேரத்தில் அந்த குரங்கு இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர் கோபிநாத் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் குரங்கின் உடலை மீட்டனர். அவர்கள் அந்த குரங்கை கிருஷ்ணகிரி கார்வேபுரம் ஏரிக்கரையோரம் கொண்டு சென்றனர். அங்கு குரங்கிற்கு பால் ஊற்றி மலர் தூவினார்கள். பிறகு குரங்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story