ஆற்காட்டில் குரங்குகள் தொல்லை


ஆற்காட்டில் குரங்குகள் தொல்லை
x

ஆற்காட்டில் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


ஆற்காடு நகராட்சி 16-வது வார்டு வேலூர் மெயின்ரோடு 3-வது குறுக்கு தெருவில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. குரங்குகள் அட்டகாசத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். பூஞ்செடிகள், இதர செடிகளை நாசம் செய்கின்றன. இரவில் வீட்டின் மொட்டை மாடிகள், அங்குள்ள ஒரு ரைஸ்மில்லில் ஓய்வெடுக்கின்றன. மக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story