பழனியில் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்


பழனியில் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 16 July 2023 2:30 AM IST (Updated: 16 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் குரங்கு, மயில் உள்பட பல்வேறு உயிரினங்கள் வசிக்கின்றன. இதில் குரங்குகள் கோவில் பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் அளிக்கும் உணவுகளை உண்டு வாழ்கின்றன. கடந்த சில நாட்களாக பழனி நகர், அடிவார பகுதியில் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவற்றை யாரேனும் விரட்டினால் கடிக்க வருவது போன்று அச்சுறுத்துகின்றன. சில நேரங்களில் ஆபத்தான முறையில் மின்கம்பிகளை பிடித்து கொண்டு செல்கின்றன. குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, குரங்குகளால் அச்சுறுத்தல் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அதேவேளையில் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் குரங்குகள் இயல்பாகவே வனப்பகுதியில் தங்களுக்கான இரையை தேடிக்கொள்ளும். அதேபோல் மலைப்பாதையில் உணவுகளை போடுவதால் அவற்றை உண்ண வரும் குரங்குகள் விபத்தில் சிக்க நேரிடும் என்றனர்.


Related Tags :
Next Story