குரங்குகள் அட்டகாசம்
குரங்குகள் அட்டகாசம்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பஜாரில் ஏராளமான வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குரங்குகள் தினமும் கடைக்குள் புகுந்து பிஸ்கட், ரஸ்க், சேமியா உள்ளிட்ட உணவு பொருட்களை தூக்கி செல்கின்றன.
இது தவிர அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கூலி வேலைக்கு சென்றவுடன் மேற்கூரைகளின் வழியாக வீட்டிற்குள் நுழைந்து உணவுகளை தின்று சேதப்படுத்துகின்றன. இவ்வாறு தினமும் குரங்குகள் அட்டகாசம் செய்வதால், அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story