குரங்குகள் அட்டகாசம்


குரங்குகள் அட்டகாசம்
x

களக்காட்டில் குரங்குகள் அட்டகாசம் செய்தன

திருநெல்வேலி

களக்காடு:

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வீடுகளுக்குள் புகும் குரங்குகள் உணவுப்பொருட்களை தூக்கி செல்கின்றன. அவைகளை விரட்ட முயற்சிப்பவர்களின் மீது பாய்ந்து கடித்து காயப்படுத்துகின்றன.தென்னை, மாதுளை, கொய்யா போன்ற மரங்களில் ஏறி, காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story