குரங்குகள் அட்டகாசம்பொதுமக்கள் அவதி


குரங்குகள் அட்டகாசம்பொதுமக்கள் அவதி
x

ஆரல்வாய்மொழியில் குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் அவதி

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி மலைகளால் சூழப்பட்ட பகுதி என்பதால், குரங்குகள் மலைகளை விட்டு இறங்கி ஊருக்குள் கூட்டம், கூட்டமாக வருகிறது. அவ்வாறு வரும் குரங்குகள் வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்வது, கால்நடைகளை கடிப்பது, தென்னையில் ஏறி தேங்காயை பறித்து வீசுவது உள்ளிட்ட சேட்டைகளில் ஈடுபடுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில நேரங்களில் வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன. அதை கண்டு வீட்டில் இருப்பவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வருகின்றனர்.

குரங்குகளின் அட்டகாசம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் வந்து கூண்டு வைத்து சில குரங்குகளை பிடித்து செல்கிறார்கள். ஆனாலும் குரங்குகள் குறைந்தபாடில்லை. எனவே குரங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story