வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்


வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரல்வாய்மொழி மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும். இங்கு குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் உணவுக்காக ஊருக்குள் அவ்வப்போது புகுந்து விடும். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவ்வாறு புகும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பாத்திரங்களை எடுத்து செல்வது, குழந்தைகளிடம் இருந்து திண் பண்டங்களை பிடுங்கி சாப்பிடுவது, தென்னைமரத்தில் ஏறி இளநீரை பறித்து வீசுவது, விரட்டினால் கடிக்க வருவதுவதுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story