மானகிரி பகுதியில் குரங்குகள் அட்டகாசம்


மானகிரி பகுதியில் குரங்குகள் அட்டகாசம்
x

மானகிரி பகுதியில் நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே தலக்காவூர் ஊராட்சி மானகிரி. அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாயகி அம்மன்கோவில் நகர், சீனிவாசா நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் சமையல் அறை வரை செல்லும் குரங்குகள் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை எடுத்து செல்கின்றன. குழந்தைகள் தின்பண்டங்கள் தின்னும் போது அவற்றை பறித்து செல்கின்றன.

குடிநீருக்கான பிளாஸ்டிக் குழாய்களை உடைத்து விடுகின்றன. அதோடு சில சமயங்களில் குழாயை திறந்து தண்ணீரை திறந்து விடுகின்றன. ஒரு சிலரின் செல்போன்களையும் குரங்குகள் எடுத்துச் சென்றுவிட்டன. மொட்டை மாடியில் துணி துவைத்த துணிகளை உலர வைத்தால் அவற்றை எடுத்துச்சென்று வேறு வீடுகளிலோ அல்லது மரங்களின் உச்சியிலோ போட்டு விடுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

எனவே மானகிரி பகுதியில் நாளுக்கு நாள் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story