குடியிருப்பு பகுதியில் தொல்லை கொடுத்த குரங்குகள் பிடிபட்டன


குடியிருப்பு பகுதியில் தொல்லை கொடுத்த குரங்குகள் பிடிபட்டன
x

பணகுடியில் குடியிருப்பு பகுதியில் தொல்லை கொடுத்த குரங்குகள் பிடிபட்டன.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வனத்துறைக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் கடந்த சில நாட்களாக கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் வனச்சரக அலுவலர் ரவீந்திரன், வனவர் மணிகண்டன், வனக்காப்பாளர்கள் வனஜா, பிரதீபா, ராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் சரவணன், சிராஜ் ஆகியோர் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குடியிருப்புகளுக்குள் சென்று தொல்லை கொடுத்த 10 குரங்குகள் குட்டியுடன் பிடிபட்டன. பிடிபட்ட குரங்குகள் வனத்துறையால் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதிகளில் பாதுகாப்பாக விடப்பட்டன. வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story