கேமராக்களை சேதப்படுத்திய குரங்குகள் கூண்டில் சிக்கின


கேமராக்களை சேதப்படுத்திய குரங்குகள் கூண்டில் சிக்கின
x

செண்பகராமன்புதூர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய குரங்குகள் கூண்டில் சிக்கின

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும். இங்கு குரங்குகள் உள்பட பலவகையான விலங்குகள் வாழ்கின்றன. கடந்த சில நாட்களாக குரங்குகள் உணவுக்காக மலையைவிட்டு கீழே வந்தவை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன. பின்னர், அந்த குரங்குகள் வீடுகளுக்குள் சென்று உணவு பொருட்களை தூக்கிச் செல்வதும், மரங்களில் இளநீர், பப்பாளி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வந்தன. செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிளைவுட் நிறுவனத்துக்குள் புகுந்த குரங்குகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தின. மேலும், குழந்தைகள், பெண்களை கடிக்க முயற்சிப்பது, துரத்துவது என தொடர்ந்து அந்த குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. எனவே, குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து வனத்துறை சார்பில் தனியார் நிறுவன வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் 6 குரங்குகள் சிக்கின. பின்னர் அந்த குரங்குகள் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.


Next Story