தூத்துக்குடியில் மாதந்தோறும் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம்


தூத்துக்குடியில் மாதந்தோறும் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 4:19 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மாதந்தோறும் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடிமாவட்டத்தில் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் 5-வது வாரியக் கூட்டத்தில் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு ஒவ்வாரு மாதமும் முதல் வார வெள்ளிக்கிழமை குறைதீர்க்கும் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் ஒவ்வொரு மாதமும் முதல்வாரத்தில் வெள்ளிக்கிழமை திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து திருநங்கைகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story