மாதாந்திர பராமரிப்பு பணி: கரூர், அரவக்குறிச்சி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


மாதாந்திர பராமரிப்பு பணி: கரூர், அரவக்குறிச்சி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கரூர், அரவக்குறிச்சி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கரூர்

மின்சாரம் நிறுத்தம்

கரூர் துணைமின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கரூர் காமராஜபுரம், கே.வி.பி.நகர், செங்குந்தபுரம், பெரியார்நகர், ஜவகர்பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், ரத்தினம் சாலை, கோவைரோடு, திருக்காம்புலியூர், செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

தாந்தோணிமலை

தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கணபதிபாளையம் தெற்கு, வடக்கு, முத்தலாடம்பட்டி, கருப்பகவுண்டன்புதூர், திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு, உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம், பண்டுதன்காரன்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது

அரவக்குறிச்சி

இதேபோல், பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, பெரியசீத்தப்பட்டி, ஈசநத்தம், சந்தைப்பேட்டை,மொடக்கூர், குறிகாரன்வலசு, அரவக்குறிச்சி டவுன் பகுதி, கொத்தபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர்கள் கணிகைமார்த்தாள், ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story