உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படும் - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தகவல்


உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படும் - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தகவல்
x

உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மதுரை


உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம்(இ.பி.எப்.ஓ.) என்பது இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம் 1995-ன் விதிகளுக்கு இணங்க ஒவ்வொரு ஓய்வூதியதாரரும், ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

மின்னணு உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்பிக்காத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், தங்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை அருகிலுள்ள இ-சேவை மையம், வங்கி கிளை, அஞ்சல் அலுவலகம் போன்றவற்றின் மூலம் புதுப்பிக்கலாம்.

புதுப்பிக்கும் வசதி

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சமீபத்தில் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால், உயிர்வாழ் சான்றிதழை மேலும் புதுப்பிக்கும் வரை மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏதேனும் மரணம் அடைந்தால் அத்தகைய ஓய்வூதியதாரரின் குடும்ப உறுப்பினர் இறப்பு சான்றிதழின் நகலை இந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இந்த தகவலை மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையர் அமியா காந்த் ஒரு அறிக்ைகயில் ெதரிவித்துள்ளார்.


Next Story