செயலாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்


செயலாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்
x

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனரும், இணைப்பதிவாளருமான பெரியசாமி தலைமை தாங்கினார். நாகை மண்டல இணைப்பதிவாளர் அருள் அரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறை துணை பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டன


Next Story