மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாத ஊதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும்


மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாத ஊதியம்  கருவூலம் மூலம் வழங்க வேண்டும்
x

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாத ஊதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும்

நாகப்பட்டினம்

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாத ஊதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில நிர்வாகிகள் கூட்டம்

நாகையில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் வாகலிங்கம், மாநில துணைத்தலைவர் திப்புகருப்பசாமி, மாநில மகளிர் அணி அமைப்பாளர் வேல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பின்னர் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் மீண்டும் பணி வழங்கி பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஊதியம் கிடைக்கவில்லை. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாத ஊதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும்.

வாரிசுகளுக்கு வேலை

மக்கள் நலப்பணியாளர் நீக்கம் சட்டவிரோதமானது என ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்தை ஊதியத்துடன் கூடிய பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

60 வயதை கடந்த மக்கள் நலப்பணியாளர் மீண்டும் பணியில் சேர இயலாத காரணத்தால் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த வாரிசுகளுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story