மூக்கனூர் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்


மூக்கனூர் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
x

மூக்கனூர் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான சுமார் 43 ஏக்கர் பரப்பளவில் உள்ள அனுப்பன்தாங்கல் ஏரியில் சில தனிநபர்கள் 13 ஏக்கர் பரப்பளவில் ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரில், சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பு மற்றும் நெற்பயிர்கள் அகற்றப்பட்டன. அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதன், ராஜா அயூப்கான், நில அளவர் தமிழ்வாணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ் சண்முகப்பிரியா, சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story