மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதல்; 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம்


மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதல்; 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம்
x

குளித்தலையில் மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

கரூர்

விபத்தில் 4 பேர் காயம்

குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 56). இவர் தனது பேரக்குழந்தைகளான பிரதிக்ஷா, பிரஜித் ஆகியோருடன் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்சி- கரூர் சாலையில் குளித்தலை பெரியார் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் மொபட்டில் வந்த குளித்தலை அண்ணா நகரை சேர்ந்த அக்ஷரா (31) என்பவர் சண்முகசுந்தரம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார். இதில் சண்முகசுந்தரம், பேரக்குழந்தைகளான பிரதிக்ஷா, பிரஜித் மற்றும் அக்ஷரா ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 4 பேரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அக்ஷரா மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story