லாரி மீது மொபட் மோதல்; தொழிலாளி பலி


லாரி மீது மொபட் மோதல்; தொழிலாளி பலி
x

லாரி மீது மொபட் மோதியதில் தொழிலாளி பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கல் ஒட்டர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் தனது மருமகளை மொபட்டில் அழைத்து கொண்டு சிறுவாச்சூர் பிரதான சாலையில் இறக்கி விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த துரைராஜை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் துரைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story