கும்பகோணத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது


கும்பகோணத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது
x

கும்பகோணத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது

தஞ்சாவூர்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

5 ஆண்டுகள் தடை

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜனதா அலுவலகம் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது

போலீஸ் பாதுகாப்பு

இதனையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், பேபி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கைது

இந்தநிலையில் நேற்று மாலை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்ைப சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story