காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்ற முன்வர வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்ற முன்வர வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x

காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெற்றி பெற்ற பெண்கள் என்ற தலைப்பில் பெண் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். கல்லூரி, மாணவிகளிடம் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் பேசினார். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது பெண்கள், பணிபுரியாத துறைகளே இல்லை என்றே கூறலாம். மேலும் அவர்கள் அத்துறைகளில் பல சாதனைகளும் செய்து வருகின்றனர். இன்றைய பெண்கள், மன தைரியத்துடனும் மன வலிமையுடனும், தங்களது துறைகளிளோ அல்லது வாழ்க்கையிலோ உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள முன்வர வேண்டும். கல்லூரி மாணவிகள் காவல்துறையில் சேர்ந்து அதிகம் அளவில் பணியாற்ற முன் வர வேண்டும். அவ்வாது பணியாற்ற முன்வரும் பெண்களுக்கு வழி காட்டுதல் நிகழ்ச்சியும் நடத்தப்படும். கல்லூரி மாணவிகள் அவர்களின் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இலவச உதவி எண்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.


Next Story