காளியாபுரம் ஊராட்சியில் முடங்கிப்போன முருங்கை உற்பத்திக்கூடம்-புத்துயிர் பெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


காளியாபுரம் ஊராட்சியில் முடங்கிப்போன முருங்கை உற்பத்திக்கூடம்-புத்துயிர் பெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 5 Sept 2023 1:00 AM IST (Updated: 5 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

காளியாபுரம் ஊராட்சியில் போதிய பராமரிப்பின்றி புதர் முருங்கை உற்பத்திக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்


ஆனைமலை


காளியாபுரம் ஊராட்சியில் போதிய பராமரிப்பின்றி புதர் முருங்கை உற்பத்திக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.


முருங்கை விதை உற்பத்திக்கூடம்


ஆனைமலை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளது. அதில் மத்திய, மாநில அரசின் உதவியுடன் 6 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் அல்லது மூலிகைச்செடிகள் மையம் அமைக்க கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகையில் மரக்கன்றுகள் அல்லது மூலிகைச் செடிகளை 100 நாள் வேலை திட்டம் அல்லது மகளிர்சுய உதவி குழு பணியாற்றும் ஊழியர்கள் மூலம் வருடத்திற்கு 5000 கன்றுகளை உற்பத்தி செய்து அதனை பொதுமக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்தில் கொடுக்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இதனால் ஊராட்சிகளுக்கும் சிறிய வருமானம் கிடைக்கும்.


இந்த நிலையில் காளியாபுரம் ஊராட்சியில் 2021-22 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் முருங்கை விதை உற்பத்திக்கூடம் அமைக்க ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இரும்பு கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் உள்ளது. இதனால் தற்போது அந்த கூடம் புதர் சூழ்ந்து காணப்படுகிறது.


புதர் சூழ்ந்து காணப்படுகிறது


இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- அனைத்து ஊராட்சிகளிலும் நிதி பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில், இது போன்ற திட்டத்தினை ஊராட்சி நிர்வாகம் சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நன்மையும், ஊராட்சிக்கு வருமானமும் ஈட்ட வேண்டும். ஆனால் தற்போது 1½ வருடமாக அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட முருங்கை விதை உற்பத்தி மைய கொட்டகை போதிய பராமரிப்பின்றி சிதலமடைந்து, புதர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. கிராமங்களில் இரும்புச்சத்து குறைபாடான குழந்தைகள், இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு இரும்பு சத்தினை அதிகரிக்க முருங்கைக்காய், முருங்கை உதவியாக இருக்கும் என்ற தமிழக அரசின் நோக்கம் செயல் இழந்துள்ளது. எனவே காளியாபுரம் ஊராட்சியில் முருங்கை விதை உற்பத்திமைய இரும்பு கொட்டகையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story