சிறுவளையம் ஊராட்சியில் கொசு ஒழிப்பு பணி


சிறுவளையம் ஊராட்சியில் கொசு ஒழிப்பு பணி
x

சிறுவளையம் ஊராட்சியில் கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த சிறுவளையம் ஊராட்சியில் சுகாதார துறையினர் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவளையம் ஊராட்சியில் அனைத்து வார்டிலும் உள்ள வீடுகள் மற்றும் தொட்டிகளில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தேங்கியுள்ள நீரை அகற்றி கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க கொசு மருந்து, பிளிச்சிங் பவுடர், பெனாயில் ஆகியவற்றை தெளித்தனர்.

பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு மத்தியில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க கழிவறைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.


Next Story