மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி


மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி
x

முக்கூடல் அருகே குடும்ப தகராறில் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். அவர்கள் 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் அருகே குடும்ப தகராறில் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். அவர்கள் 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனியார் நிறுவன ஊழியர்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அணைந்தநாடார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி முத்துசெல்வி (வயது 27). இவர்களுடைய மகள் பென்ஷிகா (7).

சுரேஷ், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மனைவியும், மகளும் அணைந்தநாடார்பட்டியில் வசித்து வருகின்றனர்.

தாய்-மகள் விஷம் குடித்தனர்

சம்பவத்தன்று சுரேஷ் தன்னுடைய மனைவியிடம் செல்போனில் பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த முத்துசெல்வி தனது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் அதனை அருந்தினார். இதனால் தாயும், மகளும் மயங்கி விழுந்தனர்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்ைசக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கூடல் அருகே குடும்ப தகராறில் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story