சொத்து தகராறில் தாய் அடித்து கொலை


சொத்து தகராறில் தாய் அடித்து கொலை
x

சந்தவாசல் அருகே சொத்து தகராறில் தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே சொத்து தகராறில் தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

100 நாள் வேலை

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கேளூர் கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சிவகாமி (வயது 69), இவரது கணவர் சக்கரபாணி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர்களுக்கு ராஜா (37) என்ற மகன் உள்ளார். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மகள் உமாமகேஸ்வரிக்கு திருமணமாகி கணவருடன் பெரிய கொழப்பலூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை 100 நாள் வேலைக்கு சிவகாமி சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் இருந்த ராஜா, பூர்வீக சொத்தான நிலத்தை விற்று பணம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, சிவகாமியை தாக்கி, தலைமுடியை பிடித்து கதவில் மோதி விட்டு வெளியே சென்று விட்டார்.

போலீசார் விசாரணை

சிறிதுநேரம் கழித்து ராஜா திரும்பி வந்து பார்த்துபோது சிவகாமி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் சந்தவாசல் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது தாய் கீழே தவறி விழுந்ததில் இறந்துவிட்டார் என்று புகார் அளித்தார்.

இதையடுத்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கார்த்திக் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ராஜா சிவகாமி பிடித்து தள்ளியபோது கதவில் மோதி இறந்தது தெரிய வந்தது.

மகன் கைது

இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்த சிவகாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story