பிரசவத்தின்போது தாய்-குழந்தை சாவு


பிரசவத்தின்போது தாய்-குழந்தை சாவு
x

பிரசவத்தின்போது தாய்-குழந்தை இறந்தனர்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள சுனைப்புகநல்லூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 40). டிரைவர். இவரது மனைவி விஜயசாந்தி(38). இந்த தம்பதிக்கு ராகுல்(15) என்ற மகனும், சாதனா(9) என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு விஜயசாந்திக்கு கர்ப்பப்பை பலவீனமாக இருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான விஜயசாந்தி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் அவருக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிகிச்சையில் இருந்த விஜயசாந்திக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன்சிங் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயசாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரசவத்தின்போது தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story