கை குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை


கை குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
x

கை குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மேல்எடையாளம் கிராமம் கடகால் தோப்பு பகுதியை சேர்ந்தவர் லாலு பாஷா. இவரது மகள் பிர்தோஸ் (வயது 22).

இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் ஆவூரை சேர்ந்த அப்துல்லா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அப்துல்லா திருவண்ணாமலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெர்தோஸ் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு, பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஹயானா என்று பெயரிட்டனர்.

கிணற்றில் பிணமாக மிதந்தனர்

இந்த சூழ்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு பிறகு பிர்தோஸ் மற்றும் அவரது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள பாழடைந்த ஒரு விவசாய கிணற்றில் பிர்தோசும், அவரது குழந்தையும் பிணமாக கிடந்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தாய், சேய் இருவரது உடல்களையும் மீட்டனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பிர்தோஸ் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

காரணம் என்ன?

தொடர்ந்து குழந்தை, தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சினை காரணமாக, கை குழந்தையுடன் பிர்தோஸ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story