தாய் பலி்; மகள் படுகாயம்


தாய் பலி்; மகள் படுகாயம்
x

தாய் பலி்; மகள் படுகாயம்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.மகள் படுகாயம் அடைந்தார்.

நிலை தடுமாறியது

சுல்தான்பேட்டை ஒன்றியம் எஸ்.குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கோமதி (வயது 65). இவரது மகள் உஷா (32). சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் சந்திராபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடல் பரிசோதனைக்கு சென்றனர். இருசக்கர வாகனத்தை உஷா ஓட்டினார். கோமதி பின்னால் அமர்ந்து இருந்தார். பரிசோதனைக்கு பிறகு இருவரும் அதே இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். வாரப் பட்டியில் இருசக்கர வாகனம் சென்றபோது சாலையில் உள்ள வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கியது. அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சரிந்து விழுந்தது.

பரிதாப சாவு

இதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில், பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோமதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுல்தான்பேட்டைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story