சிறை கைதிக்கு கஞ்சா கொண்டு வந்த தாய், சகோதரி கைது
சிறை கைதிக்கு கஞ்சா கொண்டு வந்த தாய், சகோதரி கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் ஜெரோன். இவர் குற்ற வழக்கில் கைதாகி விருதுநகரில் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக அவருடைய தாயார் ரெஜினாமேரி (வயது 48), சகோதரி ஆரோக்கிய ஜெனிதா (28) ஆகிய இருவரும் விருதுநகர் மாவட்ட ஜெயிலுக்கு வந்தனர். இவர்கள் ஆரோக்கியராஜ் ஜெரோனுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்த பொருட்களை சிறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு எண்ணெய் பாட்டிலில் 7 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர். இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு ரமா பிரபாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரெஜினா மேரி, ஆரோக்கிய ஜெனிதா ஆகியோர் கொண்டு வந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.