நிலம் அளப்பது தொடர்பான தகராறில் தாய்- மகன் கைது
களம்பூர் அருகே நிலம் அளப்பது தொடர்பான தகராறில் தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த அணியாலை கிராமத்தில் சேட்டு என்பவரின் மனைவி கஸ்தூரி, அவரது மகன் முத்து ஆகிய இருவரது நிலத்தை அளந்து கொடுப்பது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கும், இவர்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக களம்பூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கடந்த 2022-ம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் கஸ்தூரி அவரது மகன் முத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதே கிராமத்தை சேர்ந்த எல்லம்மாள் என்பவருக்கும், கஸ்தூரி, முத்து ஆகியோருக்கும் இடையே நிலம் அளப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு களம்பூர் போலீஸ் எல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கஸ்தூரி, முத்து ஆகியோரை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story