கார் மீது லாரி மோதி தாய்-மகன் காயம்
கார் மீது லாரி மோதி தாய்-மகன் காயம் அடைந்தனர்.
கரூர்
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கீழமுனையனூர் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜ் (வயது 30). இவர் தனது தாயார் இலஞ்சியம் (45), தம்பி கார்த்திக் (26) ஆகியோருடன் காரில் திருச்சி-கரூர் சாலையில் குளித்தலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு தனியார் பால் நிறுவனத்தின் லாரி காரில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த இளஞ்சியம், கார்த்திக் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story