தாய்-மகன் தற்கொலை
பாபநாசத்தில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். தாயின் உடலை பார்த்த மகனும் மனம் உடைந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
மகனும் உயிரை மாய்த்துக்கொண்டார்
இந்த நிலையில் வீட்டில் இருந்த தாயை காணாமல் அவரது 2-வது மகன் அன்பரசன்(28) திடுக்கிட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடினார். பின்னர் குடமுருட்டி ஆற்றுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு தனது தாய் வசந்தா தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்தவுடன் கதறி அழுதார். தனது தாய் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அன்பரசனும் அதே இடத்தில் தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து வசந்தாவின் மற்றொரு மகன் விஜயராகவன் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இவர்களது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.