வெங்கடேச பெருமாள் கோவிலில் தாயார் திருவடி சேவை


வெங்கடேச பெருமாள் கோவிலில் தாயார் திருவடி சேவை
x

வெங்கடேச பெருமாள் கோவிலில் தாயார் திருவடி சேவை நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ஊராட்சியில் உள்ள புலியூர் திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீதேவி, பூமாதேவி, கோதாதேவி, பத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பத்மாசனத்தில் அமர்ந்த கோலம், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த 18-ந் தேதி ஐப்பசி மாதப்பிறப்பு துலா விஷ-புண்ணிய காலத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று இரவு பத்மாவதி தாயாருக்கு கொலுசுகள் அணிவிக்கப்பட்டு திருவடி சேவை நடைபெற்றது. இதில் கோவில் காரியதரிசிகள், பெரம்பலூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட வெளியூர் பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் திரளான கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டனர். நவராத்திரி சிறப்பு பூஜைகளை கோவில் ஸ்தானிகம் கோபாலன் அய்யங்கார் மற்றும் வாஸ்து நிபுணர் ஸ்ரீராம் ஆதித்யா ஆகியோர் நடத்தினர். நவராத்திரி உற்சவம் நிறைவு நிகழ்ச்சியாக விஜயதசமி அன்று வெங்கடேசபெருமாள் ஊருக்குள் புறப்பாடு செய்து, அம்பு போடுதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து சகஸ்ர (1008) தீபம் ஏற்றப்பட்டு, பெருமாள் தாயார் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.


Next Story