ரயிலில் அடிபட்டு குழந்தையுடன் தாய் பலி


ரயிலில் அடிபட்டு குழந்தையுடன் தாய் பலி
x

நீடாமங்கலம் அருகே ெரயிலில் அடிபட்டு ஒரு வயது குழந்தையுடன் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 1½ ஆண்டில் நடந்த இந்த துயரம் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே ெரயிலில் அடிபட்டு ஒரு வயது குழந்தையுடன் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 1½ ஆண்டில் நடந்த இந்த துயரம் நடந்தது.

இரட்டை குழந்தைகள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடக்கு மடவிளாகம் தெருவை சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் ராதிகா(வயது 25). இவருக்கும், ஆதனூர் மண்டபம் கீழத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சற்குணம் (28) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர். சற்குணம், வடமாநிலத்தில் காற்றாலை நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். ராதிகா ஆதனூர் மண்டபத்தில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

ரெயிலில் அடிபட்டு தாய்-மகன் சாவு

நேற்று மதியம் காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரெயில் ஆதனூர் சாமந்தான் காவிரி ஆறு அருகே வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் அடிபட்டு ராதிகாவும் அவரது 1 வயது குழந்தையும் இறந்து கிடந்தனர். ராதிகாவின் மற்றொரு மகன் ராம்சரன் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்தான்.இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் ெரயில்வே போலீசார் மற்றும் நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராதிகா மற்றும் அவரது மகன் சாய்ரட்ஷன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராம்சரணை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

விசாரணை

இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகா குழந்தையுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவில் மர்மம் ஏதும் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ராதிகாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் மன்னார்குடி உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story