தாய்மார்களை குடும்ப கட்டுப்பாடு செய்திட ஊக்குவிக்க வேண்டும்


தாய்மார்களை குடும்ப கட்டுப்பாடு செய்திட ஊக்குவிக்க வேண்டும்
x

3 குழந்தைகளுக்கு மேல் உள்ள தாய்மார்களை குடும்ப கட்டுப்பாடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி பேசினார்.

ராணிப்பேட்டை

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில், தாய்சேய் இறப்பு குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறியப்பட்டது.

குடும்ப நலத்துறை மூலம் அனைத்து மருத்துவமனைகளிலும் குடும்ப கட்டுப்பாடுகள் செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆண், பெண் பிறப்பு விகிதாச்சாரம் வேறுபாடுகள் உள்ள வட்டாரங்களில் அதற்கான காரணங்கள் கேட்டறியப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ஊக்குவிக்க வேண்டும்

அதிக பிரச்சினை உள்ள தாய்மார்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்கு மேல் உள்ள தாய்மார்களுக்கு போதிய ஆலோசனைகள் வழங்கி குடும்ப கட்டுப்பாடு செய்திட ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களிடையே கஞ்சா, போதை பழக்கத்தை கட்டுப்படுத்த பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி திட்டம் 3 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 வாரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. அதற்கு அனைத்து மருத்துவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இணை இயக்குனர்கள் விஜயாமுரளி, மணிமேகலை, துணை இயக்குனர்கள் மணிமாறன், பிரீத்தி மற்றும் அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story