மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை அருகே உள்ள தெற்குகாட்டை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் ஸ்டீபன்(வயது24). கம்பி பிட்டரான இவர் நேற்று ஜாம்புவானோடை ஆற்றங்கரை தர்கா வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் 1 மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து ஸ்டீபன் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை தள்ளி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் நாகை மாவட்டம், கீழ்வேளுர் அருேக உள்ள கோவில் கடம்பாவூர் சன்னதி தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ் என்ற பிரகாஷ்(30) என்பதும் அவர் ஸ்டீபனின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சதீஷ் என்ற பிரகாசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story