2 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


2 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x

தஞ்சையில் 2 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த துரைராஜன் என்பவரின் மகன் சீனிவாசன் (வயது 33). இவர் கடந்த 17-ந்தேதி தெற்கு வீதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடை முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேற்கு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதேபோல் தஞ்சை கீழவாசலை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் ஆரோக்கிய செபாஸ்டின் (40). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளை கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கிய செபாஸ்டின் இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

----


Next Story